×

விவசாயிகள் சாலை மறியல்

திருக்கோவிலூர், பிப். 11: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து  விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம் முதல்  விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும், கமிட்டியில் விவசாயிகள் விற்பனை செய்த பொருளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் சுமார் 3 கோடி வரை பணம் பட்டுவாடா செய்யாத காரணத்தாலும், கூலி உயர்வு கேட்டு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்  வேலைக்கு வராமல் உள்ளதால் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து 28ம் தேதி முதல் மார்க்கெட் கமிட்டி மூடப்படுவதாக  நிர்வாகம் அறிவித்த காரணத்தால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அடி மாட்டு விலைக்கு விற்பதாக வந்த தகவலையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்  முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் வியாபாரிகள் கமிட்டிக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உடனடியாக கட்ட வேண்டும்.  இல்லையென்றால் லைசென்ஸ் கேன்சல் செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தியதால் பெரும்பாலான தொகை வியாபாரிகளிடம் வசூல் செய்து விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் ஆட்சியர் அண்ணாதுரை அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டிக்கு வந்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் விவசாயிகள் உளுந்துக்கு விலை போடுவதில் பாரபட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாகவும்,  கடந்த இரண்டு நாட்களை விட மூட்டைக்கு 1500 முதல் 1500 வரை குறைவாக சொல்வதாக கூறி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் தலைமையில் போலீசார் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம்  தனித்தனியாக  சுமார் 2 மணிநேர பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 2 மணி நேரம் திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் கமிட்டியில் இருந்து மணம்பூண்டி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Farmers Road Pickup ,
× RELATED நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் சாலை மறியல்